ஜாலியன் வாலாபாக் படுகொலையும் கஞ்சி தொட்டியும்: இளங்கோவன் வர்ணனை
சென்னை:
சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை போலவே மதுரையில்நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்க முயன்ற திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இது குறித்து மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் திமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போலீசார் தான் முழுக்க முழுக்க காரணம்.
போலீசார் மூலம் தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கெல்லாம் தமிழக அரசுபதிலளித்தே ஆக வேண்டும்.
மதுரை போலீஸ் கமிஷனர் சூர்யபிரகாசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிராக திமுகவினர் யாராவது, ஏதாவது கூறியிருந்தால் அதிமுகவினர் தான் அதற்குப் பதில் கொடுத்திருக்கவேண்டும். அதற்குப் பதிலாக போலீசார் ஏன் திமுகவினரைத் தாக்க வேண்டும்?
மதுரை செல்லூரில் உள்ள அவ்வளவு குறுகலான இடத்தில் திமுகவினர் மீது போலீசார் வன்முறையில்இறங்கியுள்ளது சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தான் நினைவுபடுத்துகிறது.
அராஜகத்தைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவுக்காகத் தயாராகி வந்த மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தை ஒதுக்கதமிழக அரசு கடைசி நேரத்தில் மறுத்து விட்டதாகவும் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
இணைப்பு விழா குறித்து அவர் மேலும் கூறுகையில், விரைவில் தமிழகத்தில் அமையவுள்ள காமராஜர் ஆட்சியின்முதற்கட்ட நடவடிக்கை தான் இந்த இணைப்பு விழா ஆகும். இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி பேசும் பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார் இளங்கோவன்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications