ஊட்டியில் கன மழை: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழைபெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது.
குறிப்பாக ஊட்டியில் கன மழை பெய்வதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த மழை காரணமாக தோட்டப் பயிர் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உருளை போன்ற பயிர்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து:
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை வலுத்துள்ளதால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது.இதைத் தொடர்ந்து உபரி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு அனுப்பி வருகிறது.
இதனால் மேட்டூருக்கு தொடர்ந்து காவிரியில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம்தற்போது 46.6 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,180 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications