தமாகாவிலிருந்து குமாரதாஸ் சஸ்பெண்ட்: 2 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
சென்னை:
அதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளர். மேலும் 2அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தங்களை தமாகா எம்.எல்.ஏக்களாகவே அங்கீகக்குமாறும், தாங்கள் தனித்தே செயல்படப்போவதாகவும் அவர்கள் சபாநாயகர் காளிமுத்துவிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கடிதம் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி நேற்றுவிவாதித்தது. தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இது குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் குமாரதாஸ் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும்ஈஸ்வரன் மற்றும் ஹக்கீம் ஆகிய இரு எம்.எல்.ஏக்களுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற இரு எம்.எல்.ஏவான மணி நாடாரை சமாதானப்படுத்தும் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடிஆதித்தனிடம் விடப்பட்டுள்ளது.
மற்றொரு எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசன் உண்மையில் தமாகாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் இந்திய குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அவர்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமாகா தலைவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மேலும் சில தமாகா எம்.எல்.ஏக்கள் எங்களது அணியில் விரைவில் சேரவுள்ளனர் என்று ஈஸ்வரன்கூறினார்.
நம்பவே முடியவில்லை - வாசன்:
இதற்கிடையே கூட்டத்திற்குப் பின்னர் வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடிதம் கொடுத்துள்ள ஐந்து எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் ஏதோ நிர்ப்பந்தத்தின் பேரிலேயே கடிதம்கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. கட்சி இணைப்பு என்பது மூப்பனாரின் முடிவு. அதையொட்டியே நானும், அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பு குறித்து முடிவு செய்தோம்.
இணைப்பு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தபோது, அதை நேரில் வந்து ஆதரித்தார் ஹக்கீம்.மதுரையில் மாநாட்டு இடம் தேடியபோதும் கூடவே இருந்து பார்த்துக் கொடுத்தார்.
பொதுக் குழு முடிவுகளை ஆதரிப்பதாக மணி நாடார் கூறியிருந்தார். அதேபோல, ஈஸ்வரனும் இணைப்பு விழாதொடர்பாக நடந்த கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். எனவே இந்த ஐந்து பேரும் அதிருப்தியாகஉள்ளார்கள் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.
இந்த விவகாரத்தால் தமாகா-காங்கிரஸ் இணைப்பு விழா பாதிக்கப்படாது. இவர்களைத் தவிர வேறுஎம்.எல்.ஏக்களும் கட்சியை விட்டு விலகுவார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
இந்தத் தடங்கல்களை எல்லாம் மீறி மதுரையில் லட்சோப லட்சம் தொண்டர்கள் பங்கேற்க இணைப்பு விழாவெற்றிகரமாக வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது என்றார் வாசன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications