நடிகையுடன் தொடர்பா?- திருவாவடுதுறை இளைய மடாதிபதி மறுப்பு
மயிலாடுதுறை:
நடிகையுடன் எனக்குத் தொடர்பு இருந்ததாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் எனது மனதை மிகவும்வேதனைப்படுத்தி விட்டன என்று கொலைக் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனஇளைய மடாதிபதியான காசி விஸ்வநாத சுவாமிகள் கூறியுள்ளார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் சமீபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மூத்த சுவாமிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இளைய சுவாமிகள் மீது புகார் கூறப்பட்டது. அவரும் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து கொலை சதித் திட்டப் புகாரின் பேரில் அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் குறித்து வாரப்பத்திரிக்கைகளில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.
மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் வெளியே வந்த அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது,
என்னைப் பற்றி பொறுப்பேயில்லாமல் சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. செய்திகளைவெளியிடும்போது ஆராய்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு வங்கியில் ஏராளமான பணம் கணக்கில் இருப்பதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உண்மையில் எனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதுஎன்பதை வெளியிட்டு எனது நிலையை விளக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிக்கை கூட இதுகுறித்துவிசாரணை நடத்தலாம்.
ஒரு பத்திரிக்கை நாகரீகமே இல்லாமல் நடிகை ஒருவருடன் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூட எழுதியுள்ளது.இது எனது மனதை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. இதுமாதிரியான செய்திகளைப் பார்க்கும்போது எனதுமனம் பாதிக்கப்படுகிறது என்றார் காசி விஸ்வநாத சுவாமிகள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications