வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் உண்ணாவிரதம்: தாயாரும் போராட்டம்
சங்கரன்கோவில்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் நடந்து வரும்உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது தாயாரும் கலந்து கொண்டுள்ளார்.
வைகோ கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று தமிழகம் முழுவதும் மதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலிமாவட்டத்தில் ஏழு இடங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
திருநெல்வேலி, சங்கரன்கோவில், நான்குநேரி, தென்காசி, ஆலங்குளம், சிவகிரி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியஇடங்களில் இப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் சங்கரன்கோவிலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வைகோவின் தாயாரான மாரியம்மாள் தான்தலைமை வகித்தார்.
சென்னை, மதுரை, கோவையில்...
இதற்கிடையே சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்பட பல இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டார அலுவலகங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு முன் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
0மதுரை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை, திருப்பூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும்அவினாசி ஆகிய இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
துண்டுப் பிரசுரங்கள் வினியோகம்:
போராட்டத்தின் ஒரு பகுதியாக மதிமுகவினர் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
"இந்திய மண்ணில் விடுதலைப்புலிகள் வன்முறையில் ஈடுபடுவதை மதிமுக என்றும் ஆதரித்ததில்லை. ஆனால்இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடி வரும் புலிகளை எப்போதும் ஆதரிக்கும்" என்று அந்தத் துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications