12வது துணை ஜனாதிபதியானார் ஷெகாவத்
டெல்லி:
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த தேர்தலில் அவர் 149 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்..
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக ஷெகாவத்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சுசில் குமார் ஷிண்டேயும் போட்டியிட்டனர்.
இன்று மொத்தம் 766 எம்.பிக்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். இதில் 454 ஓட்டுக்கள்ஷெகாவத்துக்கு ஆதரவாகவும் ஷிண்டேக்கு ஆதரவாக 305 ஓட்டுக்களும் கிடைத்தன. மீதமுள்ள 10 ஓட்டுக்கள்செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
அதே போல் வாக்களிக்காத 22 எம்.பிக்களில் மத்திய அரசை எதிர்த்துப் போர்க் கொடி எழுப்பியுள்ள திரிணாமூல்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பிக்களும் அடக்கம்.
இதையடுத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெகாவத் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய இரு பதவிகளுக்கும் நடந்த தேர்தல்களில்மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 15ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாம் பெரும் வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications