தொடங்கியது துணை ஜனாதிபதி தேர்தல்
டெல்லி:
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் மூத்த பா.ஜ.க. தலைவர்களில்ஒருவருமான பைரோன் சிங் ஷெகாவத் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்த காங்கிரஸ் கட்சி துணைஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தது.
அதன்படி மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சுசில் குமார் ஷிண்டே துணை ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுகிறார்.
ஷெகாவத் மற்றும் ஷிண்டேயைத் தவிர இந்தத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடையமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே நேரடிப் போட்டிநிலவுகிறது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுதொடங்கியது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரமோத் மகாஜன் தான் இந்தத் தேர்தலில் முதலில் வாக்களித்தார்.
அதன் பின்னர் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் அத்வானி, லோக்சபா சபாநாயகர் மனோகர் ஜோஷி, துணைசபாநாயகர் சயீத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட எம்.பிக்கள் ஒவ்வொருவராகவந்து வாக்களித்துச் சென்றனர்.
மொத்தமுள்ள 788 எம்.பிக்களில் சுமார் 455 எம்.பிக்கள் ஷெகாவத்துக்கு வாக்களிப்பார்கள் என்றும்கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ஷிண்டேவுக்கு வாக்களிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 5மணியுடன் துணை ஜனாதிபதி தேர்தல் முடிவடைகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு வாக்குகள்எண்ணப்பட்டு முடிவும் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும்ஷெகாவத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ள கட்சிகளுக்கும் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாய் விருந்தளித்தார்.
ஆனால் கிழக்கு ரயில்வேயைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கூட்டணியில் உள்ள திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
துணை ஜனாதிபதி தேர்தலில் தன் கட்சி எம்.பிக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள மம்தாஇன்று தன் கட்சியினருடன் வாஜ்பாய் இல்லத்தின் முன் தர்ணா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications