முஷாரபுக்கு கலாம் சரியான பதிலடி
டெல்லி:
ஜம்மூ-காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் ஒரு பகுதி. இதை சர்வதேசப் பிரச்சனையாக்க எக் காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கலாம் இன்று இரவு நாட்டு மக்களுக்கு டிவி மற்றும் ரேடியோ மூலம் ஆற்றவுள்ள உரையின் விவரம்:
தீவிரவாதத்தை என்று பாகிஸ்தான் நிறுத்துகிறதோ அப்போது தான் அந்த நாட்டுடன் பேசுவோம்.
அதுவரை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.
ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாக்க விரும்புகிறேன். காஷ்மீர் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் ஒரு பகுதி. அதில் சர்வதேசபிரச்சனைக்கு இடமில்லை. அங்கு இருப்பது பாகிஸ்தான் உதவியுடன் நடக்கும் தீவிரவாதப் பிரச்சனை மட்டும் தான்.
தீவிரவாதம் நின்றால் தான் அமைதி திரும்பும். அம் மாநிலத்தில் தேர்தல் நடத்துவதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது.
இந்தியா பல மதங்கள், பல இனங்கள் கொண்ட நாடு. இங்கு மதவாதத்துக்கு இடமே இருக்கக் கூடாது. பிரிவினைவாதம் தான் நமக்கு மிகப்பெரிய ஆபத்து. அதற்கு இடமே தரக் கூடாது. நமது இப்போதை முதல் வேலை நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவது தான். அது தான் நமதுதாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு மதச் சண்டை போடுவது, பிரிவினைவாதத்தை வளர்ப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடலாகாது.
மக்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. நமது பலமே பல இனங்களும் பல மதங்களும் கொண்ட நாடு என்பதுதான். அதை சீரழித்துவிடக் கூடாது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக பல இன-பல மொழி- பல மதங்கள் கொண்ட ஒன்றுபட்ட நாடாகநின்று காட்டியவர்கள் நாம். அந்தப் பெருமைக்கு ஊறு விளைவித்துக் கூடாது என்று கலாம் தனது உரையில் கூறவுள்ளார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கலாமுக்கும் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இன்று தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது பாகிஸ்தான். சுதந்திர தின உரையாற்றிய முஷாரப். காஷ்மீரில் தேர்தல் நடத்துவதன்மூலம் அந்த மாநிலத்தின் மீது இந்தியா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்த முயல்வதாக உளரித் தீர்த்தார்.
இதற்குப் பதிலடியாகத் தான் கலாமின் உரை அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி அந் நாட்டு அதிபருக்குதனது வாழ்த்தையும் கலாம் தெரிவித்துக் கொண்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications