மதுரையில் ஸ்டாலின்-அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர கோஷ்டி மோதல்: 30 பேர் கைது
மதுரை:
மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல்ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 30 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் கடந்த மாதம் கஞ்சித் தொட்டி திறப்பு விழாவின்போது திமுகவினர் மீது போலீஸார் பயங்கரத் தாக்குதல்நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்,மதுரை மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினரையும் அவர்கள் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதிலும் திமுக சார்பில் பேரணியும் ஆர்ப்பாட்டமும்நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக விவாதிக்க மதுரை திமுகவினர் நேற்று (வியாழக்கிழமை) கூடினர். இவர்கள் ஸ்டாலின்ஆதரவாளர்கள். இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அப்போது இந்தக் கூட்டத்தை நிறுத்துமாறு திமுக மேலிடம் தந்தி அனுப்பியது. இதைத் தொடர்ந்து கூட்டம்ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை ஊரக மாவட்ட திமுக செயலாளர் அக்னிராஜுவை சந்திக்க ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவர்இருந்த ஹோட்டலுக்குக் கிளம்பினர். இதை அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றி கைகலப்பாகமாறியது. ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
கற்களை எறிந்தும் அவர்கள் தாக்கிக் கொண்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடைகள்அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. அங்கே நின்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள்அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதையடுத்தே அப்பகுதியில்ஓரளவு பதற்றம் தணிந்தது.
மோதல் தொடர்பாக 30 திமுகவினரைப் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும்சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
நீண்ட நாட்களாகவே மதுரையில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களும் அழகிரி ஆதரவாளர்களும்ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையேகோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பேரணி நிறுத்தி வைப்பு:
மதுரையில் திமுகவினர் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி அங்கு நடக்கவிருந்த கண்டனப்பேரணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,மதுரையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்குத் தற்காலிகத் தடையும் விதித்துள்ளார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications