இப்படியும் ஒரு ரஜினி ரசிகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரஜினிக்காக உயிரைக் கொடுப்போம், எதையும் செய்வோம் என்று கூறும் ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம்.ஆனால் "பாபா" படம் வெளியான சமயத்தில் தான் தனது மனைவி பிரசவிக்க வேண்டும் என்று கூறிய ரசிகரைஎங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்னையச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இன்னும் 2 மாதத்தில்அவருக்குக் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் பரசுராமன் அதை விரும்பவில்லை. தனது தலைவர் ரஜினியின் படம் "பாபா" வெளியாகும் நாளில் தான்தனது குழந்தை பிறக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பரசுராமனின் விருப்பத்தின் பேரில் "பாபா" வெளியான நேற்று காலை 11.10 மணிக்கு அறுவைச்சிகிச்சை மூலம் பரசுராமனின் மனைவிக்கு பிரசவம் நடந்தது. அழகான பெண் குழந்தையைப் பெற்றார் அவர்.

குழந்தை பிறந்த நேரத்தில் பரசுராமன் அங்கு இல்லை. ஆல்பட் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு, "பாபா"வைக்காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம் குழந்தை பிறந்த செய்தியைக் கூறியபோது, ரொம்ப சந்தோஷம், ஆனால் இப்போது என்னால் வீட்டுக்குவர முடியாது. கடைசி ஷோ முடியும் வரை இங்கு தான் இருப்பேன். கடைசி ரசிகனுக்கும் இனிப்பு வழங்கி விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன் என்று கூறி விட்டார் பரசுராமன்.

இந்த தீவிர ரசிகர் தனது மனைவியைத் திருமணம் செய்து கொண்டது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு "படையப்பா"வெளியான தேதியில் தானாம்.

எல்லோரும் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை ரஜினி படம் வெளியாகும் நாள் தான் நல்ல நாள். எனவே தான் சிசேரியன் மூலம் எனது குழந்தைரஜினி பட நாளின் போது பிறக்க வேண்டும் என்று விரும்பினேன் என்கிறார் பரசுராமன்.

இப்படிக் கூட ரசிகர்கள் இருப்பார்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+