தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமானகருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரையில் ஏழை நெசவாளர்களுக்காக திமுகவினர் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய இடத்திலேயேபிரியாணி வழங்க அதிமுகவினருக்கும் அனுமதி கொடுத்ததன் மூலம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதற்குதமிழக அரசு வழிவகை செய்து கொடுத்து விட்டது.

மார்ச் மாதம் தப்பி விட்ட அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியை இன்னும் போலீசார் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

தேவையில்லாமல் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிரிகளைப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்வது, புதியதிரைப்படங்களை ("பாபா") திரையிடவே முடியாத சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் தான்சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார் என்றால் அவர்செய்வதெல்லாம் சரி தான்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாகப் போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்துகிறோம்என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.

ஐந்து மணி நேரத்திலேயே 1,754 போலீசாரிடம் குறை கேட்டுள்ளார் ஜெயலலிதா. ஒவ்வொருவரிடமும் மூன்றுநிமிடங்கள் குறை கேட்பதாக வைத்துக் கொண்டால் கூட இத்தனை போலீசாரிடமும் விசாரிப்பதற்கே 147 மணிநேரம் ஆகுமே?

குறைந்தது ஒருவருக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட 30 மணி நேரம் ஆகி விடும். இப்படிஇருக்கையில் முதல்வர் எப்படி ஐந்து மணி நேரத்திலேயே இத்தனை போலீசாரிடமும் குறை கேட்டிருக்க முடியும்?

இவ்வளவு சீக்கிரமாக விசாரித்து முடிப்பதற்கு முதல்வரிடம் அப்படி என்ன மந்திர சக்தி இருக்கிறதோ? எனக்குத்தெரியவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான அதிமுக ஆட்சியில் நடந்து வரும் கொலை, கொள்ளை மற்றும்கற்பழிப்புச் சம்பவங்களையும் கருணாநிதி தேதி வாரியாகப் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+