பெண் நிருபர் கொலை வழக்கு: மகாஜன் மீது சராமாரி புகார்
டெல்லி:
"இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிக்கை நிருபரான ஷிவானி பட்நாகர் கொலை செய்யப்பட்டதில் நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனுக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியானஐ.பி.எஸ். அதிகாரி ரவிகாந்த் ஷர்மாவின் மனைவி மது ஷர்மா சராமாரியாகப் புகார் கூறினார்.
கடந்த 1999ம் ஆண்டு ஷிவானி கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ரவிகாந்த் ஷர்மாவைப்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு மகாஜன் மீது சராமாரியாக தொலைக்காட்சி நிருபர்களிடம் புகார் கூறினார் மது ஷர்மா.
மகாஜனுக்கு ஷிவானி கொலையில் தொடர்பு உள்ளதாகவும் இதை துணைப் பிரதமர் அத்வானி தொடர்ந்துமறைத்து வருவதாகவும் ஆவேசத்துடன் கூறிய மது ஷர்மா என்னிடம் எதையும் கேட்காதீர்கள். ஷிவானியை ஏன்கொலை செய்தீர்கள் என்று மகாஜனிடம் போய்க் கேளுங்கள் என்றும் கோபத்துடன் கூறினார்.
ஆனால் அவருடைய புகார்களை மகாஜன் கடுமையாக மறுத்துள்ளார். இந்தக் குற்றச் சாட்டுகளில் எந்தவிதமானஉண்மையும் இல்லை. இது தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க நான் தயார் என்றும் மகாஜன்கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தையும் காங்கிரஸ் கட்சி கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகாஜன் மீது கொலைப் புகாரும்சுமத்தப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்வற்புறுத்த ஆரம்பித்துள்ளது.
ஆனால் மகாஜன் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ராஜினாமா செய்யவும் மாட்டார் என்று பாஜகதெளிவாகக் கூறிவிட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானியும் இதையே கூறினார்.
மேலும் தன் மீது பொய்ப் புகார் கூறிய மது ஷர்மாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும்கூறப்படுகிறது. அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று மகாஜனுக்கு பாஜக அறிவுரை கூறியுள்ளதாகஅக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்ட அமைச்சருமான அருண் ஜேட்லி கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications