பண்ருட்டியில் "பாபா" தியேட்டருக்கு மிரட்டல்: காட்சிகள் ரத்து
பண்ருட்டி:
பண்ருட்டியில் "பாபா" திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு வந்த டெலிபோன் மிரட்டலைத் தொடர்ந்துஅங்கு காலவரையின்றி அப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் "பாபா" படம் திரையிடப்பட்டுள்ள பல இடங்களிலும் வன்முறை ஏற்பட்டு வருகிறது.ஜெயங்கொண்டத்தில் "பாபா" ரிலீசாகியுள்ள தியேட்டரை ஒரு கும்பல் தாக்கி அப்படத்தின் பெட்டியை கடத்திக்கொண்டு போய் விட்டது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "பாபா" படத்தையாரும் பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். இதனால் பாமகவினர் தான் இந்தத் தாக்குதலைநடத்தியிருப்பார்கள் என்று ரஜினி ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே ராமதாஸ் பேசியதும் ஜெயங்கொண்டம் தியேட்டர் தாக்கப்பட்ட சம்பவமும் ரஜினி ரசிகர்களிடையேபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் அவர்கள் வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.திருவள்ளூரில் கூட நேற்று "பாபா" திரையிடப்பட்ட தியேட்டர் முன் அவர்கள் சில அரசு பஸ்களைக் கல் வீசிஉடைத்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் "பாபா" திரையிடப்பட்டுள்ள ஜெயராம் தியேட்டருக்கு இன்று ஒருடெலிபோன் மிரட்டல் வந்தது. "பாபா"வைத் தொடர்ந்து திரையிட்டால் தியேட்டரைத் தகர்த்து விடுவோம் என்றுமிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்தத் தியேட்டரில் "பாபா" படம் திரையிடப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. காலவரையின்றி இதுஅமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மிரட்டலைத் தொடர்ந்து ஜெயராம் தியேட்டருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும்கடலூர் மாவட்டத்தில் "பாபா" ரிலீசாகியுள்ள ஐந்து தியேட்டர்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காககுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விழுப்புரத்தில் பாமகவினரையும் ராமதாசையும் தாக்கி ரஜினிகாந்த் படத்துடன் போஸ்டர்கள்ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்த பின்னரே பாமகவினர் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications