பாண்டிச்சேரி கோவில் திருவிழாவில் மோதல்: பக்தர் குத்திக் கொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் மோதலில் ஒரு பக்தர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாண்டிச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் என்ற கோவில் உள்ளது. சுமார் 450 வயதானஇந்தக் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கே.ஆர். மல்கானி மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர்கலந்து கொண்டு தேர் இழுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பிச் சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இரு தரப்பினருக்கிடையே திடீரென்றுமோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் சின்னத்துரை மற்றும்இளங்கோவன் ஆகியோருக்குக் கத்திக் குத்து விழுந்தது.
இவர்களில் சின்னத்துரை மட்டும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகிச் சரிந்தார். இளங்கோவன்கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications