""கஞ்சியோ முட்டை பிரியாணியோ பிரச்சனைகளைத் தீர்க்காது"": சு. சுவாமி
சென்னை:
ஏழை நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்குவதாலோ அல்லது முட்டை பிரியாணி கொடுப்பதாலோ அவர்களுடையபிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுகவும் திமுகவும் தற்காலிகமாகத் தான் நெசவாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
அதனால் தான் அதிமுகவினர் முட்டை பிரியாணி வழங்குவதிலும் திமுகவினர் கஞ்சித் தொட்டி வைப்பதிலும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கவேண்டும். கைத்தறிகளை நவீன மயமாக்கி அவற்றின் மூலம் நெய்யப்படும் துணிகளை ஏற்றுமதி செய்வதற்குத்தமிழக அரசு வழி வகை செய்ய வேண்டும்.
தமிழகத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு 15 நல்ல திட்டங்களை வைத்திருப்பதாக தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார். ஆனால் அந்தத் திட்டங்கள் எல்லாம் என்ன என்பதை அவர் தெளிவாக முதலில் விளக்கவேண்டும்.
ரஜினி காந்த்தின் "பாபா" படத்தைப் பார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் வன்னியர் சமுதாயத்திற்குஉத்தரவிட்டுள்ளார். இது மிகவும் தவறானதாகும்.
சென்சார் போர்டு சான்றிதழுடன் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படத்தைப் பார்க்க மக்களுக்கு உரிமைஉண்டு. அந்த உரிமையைத் தடுப்பது ஐ.பி.சி. சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் குஜராத் செல்வதை யாரும் தடுக்கக் கூடாது. அவர் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் எப்போதும் செல்வதற்கு உரிமை உண்டு என்றார் சுவாமி.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications