5 அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்கள் எந்தப் பக்கம்? சபாநாயகர் விரைவில் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரசுடன் தமாகா இணைந்து விட்ட நிலையில் தமாகாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
காங்கிரசுடன் தங்கள் கட்சி இணைந்தாலும் தங்களைத் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏக்களாகவே கருத வேண்டும்என்று தமாகா அதிருப்தி எம்.எல்.ஏக்களான டாக்டர் குமாரதாஸ், ஹக்கீம், தமிழரசன், மணி நாடார் மற்றும்ஈஸ்வரன் ஆகியோர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நிருபர்களிடம் காளிமுத்து கூறுகையில்,
அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள் குறித்த இறுதி நிலை விரைவில் அறிவிக்கப்படும் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications