பொடா சட்டத்தின் கீழ் சுப. வீரபாண்டியன் கைது: சென்னை சிறையில் அடைப்பு
சென்னை:
சமீபத்தில் தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் இன்று காலைக்யூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 28 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பொடா தனிநீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வீரபாண்டியனின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற க்யூ பிராஞ்ச்போலீசார் அவரைப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக அவரைக் கைதுசெய்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் அலுவலகங்களில்கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வீரபாண்டியனுக்கும் புலிகளுக்கும் உள்ள தொடர்புகளை அறிந்துஅவரைக் கைது செய்துள்ளதாகவும் க்யூ பிராஞ்ச் போலீசார் கூறினர்.
பின்னர் வீரபாண்டியன் க்யூ பிராஞ்ச் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சுமார் ஒருமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் தற்போது சென்னை-பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பொடா தனி நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு நீதிபதி எல். ராஜேந்திரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் விசாரணை நடத்திய நீதிபதி ராஜேந்திரன், வீரபாண்டியனை 28 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட பின்னர் போலீசார் வேனிலிருந்தே நிருபர்களிடம் வீரபாண்டியன் பேசுகையில்,
அங்கேயும் யுத்தமில்லை. இங்கேயும் யுத்தமில்லை. மக்கள் பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காகவேநடைபெறாத பயங்கரவாதச் செயல்களுக்காக என்னை தமிழக அரசு கைது செய்துள்ளது.
இதற்கெல்லாம் காலம் விடை சொல்லும். வரலாறு எங்களை விடுதலை செய்யும் என்று கூறினார் வீரபாண்டியன்.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக ஏற்கனவே வீரபாண்டியனுக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம்இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டியன் கைதைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆகஅதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பாவாணன் என்பவருடையநீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரும் இன்று பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவருடைய நீதிமன்றக் காவலை மேலும் 28 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டதைத்தொடர்ந்து பாவாணன் மீண்டும் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரபாண்டியன் வீட்டில் சோதனை:
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வீரபாண்டியனின் வீட்டில் இன்று பிற்பகல் க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனைநடத்தினர்.
அவருடைய வீட்டிலிருந்து "சிந்தனையாளன்" என்ற மாதப் பத்திரிக்கையையும் "எரிமலை" என்ற ஈழப்பத்திரிக்கையையும் போலீசார் எடுத்துச் சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications