ராமதாசை சட்டரீதியில் சந்திப்பேன்: ரஜினி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசை சட்டப்பூர்வமாகச் சந்திப்பேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
இன்று ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ள பாபா திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று பொதுமக்களையும் ரசிகர்களையும் தடுப்பதால் அவர்களது உணர்ச்சிகள் எப்படிஇருக்கும் என்று எனக்குப் புரிகிறது.

சிலரை ஆண்டவன் படைப்பதே அவர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்யக் கூடாது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டத் தான். எனவே,ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்.

நடந்த, நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களுக்குக் காரணமான ராமதாசை நான் சட்டப்பூர்வமாகச் சந்திப்பேன்.

தமிழகம் முழுவதும் பாபா படம் வெளியாகியுள்ள தியேட்டர்களுக்கு போலீசார் முழு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் தைரியமாக குடும்பத்துடன் சென்று படத்தைப் பார்க்கலாம்.

இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந் நிலையில் பாபா படத் தயாரிப்பு நிர்வாகியான துரை மாநில காவல்துறை டி.ஜி.பியைச் சந்தித்து ராமதாசுக்கும் பாட்டாளி மக்கள்கட்சிக்கு எதிராகவும் புகார் மனு தந்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+