ஆசிரியரின் பிரம்படி: மாணவிக்கு ரத்தக் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே பள்ளி ஆசிரியர் பிரம்பால் பலமாகத் தாக்கியதில் 12 வயது மாணவி படுகாயமடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஒத்துகாளவாய்ப் பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் இச் சம்பவம் நடந்தது. அந்தப்பள்ளியில் ரேவதி என்ற 12 வயது மாணவி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
ரேவதி சரியாகப் படிக்கவில்லை என்பதால் கோபமடைந்த ஆசிரியர் ரங்கசாமி அந்த மாணவியை பிரம்பால்தாறுமாறாக அடித்ததாகத் தெரிகிறது.
இதில் ரேவதிக்கு உடல் முழுவதும் மிக பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடலெங்கும் ரத்தக் காயத்துடன் வீட்டுக்குவந்த அந்த மாணவியை அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளதால் அந்த ஆசிரியர் தற்போது தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications