சென்னை- மதுரை இடையே புதிய பகல் நேர ரயில்
சென்னை:
சென்னை- மதுரை இடையே பகல் நேர புதிய ரயில் இயக்கப்படும் என ரயில்வேதுறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை- மதுரை இடையே பயணிகள் கூட்டம் மிக அதிகமாகிக் கொண்டே போகிறது. அதை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது தென்னக ரயில்வே.
இந் நிலையில் தென்னக ரயில்வேயின் மண்டல மேலாளர்கள், கண்காணிப்பு மேலாளர்களுடன் ஆலோசனை நடத்திய மூர்த்தி பகல் நேரரயில் இயக்குவது குறித்து விவாதித்தார். இதையடுத்து தினமும் காலை 7 அல்லது 8 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து மதுரைக்கு ஒருரயிலை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்த ரயில் இயக்கப்படும் என மூர்த்திபின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதே போல சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான ரயில் பாதைகளில் ஒன்றை அகலப் பாதையாக்கி பெரிய மின்சார ரயில்களைஇயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பின்னர் இந்தப் பாதை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும் என்றார்.
திருச்சிக்கு கூடுதல் பெட்டிகள்:
அதே போல சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 தூங்கும் வசதி பெட்டிகளைஇணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
மலைக்கோட்டை ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதால் கூடுதல்பெட்டிகளை இணைக்க கோரிக்கைவிடப்பட்டது.
இந்தக் கோரிக்கையை உடனடியாக அமலாக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டதால் அதை ஏற்று அடுத்த மாதம் 10ம் தேதி முதல் இந்தரயிலில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications