திருச்சியில் போஸ்டர், மயிலாடுதுறையில் கொடும்பாவி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

நடிகர் ரஜினி காந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்து திருச்சி நகர் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்போஸ்டர்கள் ஒட்டியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சார்பில் 2 வகையான போஸ்டர்கள் திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில்ஒட்டப்பட்டுள்ளன. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு போஸ்டரில்,

தாழ்ந்த தமிழகமே,

கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில்,

காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில்,

பாபாவைக் காண அலை மோதும் கூட்டம்

பாபா டிக்கெட்டின் விலையோ ரூ. 600

தமிழனே உனது சூடு, சொரணை எத்தனை ரூபாய்

என்று கடுமையாக வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு போஸ்டரில்,

நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டி,

விவசாயிக்க்கு எலிக்கறி,

காவிரிக்கு சுடுமணல்,

கர்நாடகத்தின் ரஜினி இதற்கெல்லாம்

வாய்ஸ் கொடுக்காத மர்மம் என்ன?

என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

(மேலும் மிகக் கடுமையான வாசகங்கள் உள்ளன. அவை பிரசுரத்துக்கு ஏற்றவை அல்ல என்பதால் நாம் நீக்கியிருக்கிறோம்)

இந்த இரு போஸ்டர்களும் திருச்சி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த போஸ்டர்களை கிழித்து எறியும் பணியில் ரஜினி ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி கொடும்பாவி எரிப்பு:

இதற்கிடையே மயிலாடுதுறையில் நடிகர் ரஜினி காந்த்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதை எரித்த பாமகபிரமுகர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ரஜினிக்கு எதிராக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கருத்துக் கூறியதைக் கண்டித்து ரஜினி ரசிகர்களும்,அவர்களைக் கண்டித்து பாமகவினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்களைக் கண்டித்து பாமக கலை மற்றும் இலக்கியப் பிரிவு சார்பில் கொடும்பாவிஎரிப்புப் போராட்டம் நடந்தது.

பஸ் நிலையம் அருகே இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ம.க. கலை இலக்கியப் பிரிவுச்செயலாளர் ராமலிங்கம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+