சுப.வீரபாண்டியன் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
வேலூர்:
தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்
இதுதொடர்பாக தனது வக்கீல் மூலம் வேலூர் சிறையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொடாசட்டத்தை மறுபடியும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது பாசிச அதிமுக அரசு.
தமிழர் தேசிய இயக்கம் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையைத் தூண்டியதில்லை, வன்முறையில் ஈடுபட்டதும்இல்லை. அதிமுக அரசின் இந்த அராஜகப் போக்கை அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும்.
ஜனநாயகத்தை நசுக்கும் செயல் இது என்று கூறியுள்ளார் வைகோ.
க்யூ பிராஞ்ச் சோதனை:
இந் நிலையில் வீரபாண்டியனின் வீட்டில் க்யூ பிராஞ்ச் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தினர்.
பேட்டி:
சிறைக்குக் கொண்டு செல்லப்படும் முன் போலீஸ் வேனில் இருந்தபடி நிருபர்களிடம் பேசிய வீரபாண்டியன், நாட்டில் இருக்கிற பசி,பஞ்சத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, இல்லாத தீவிரவாதத்தைச் சொல்லி எங்களைக் கைது செய்கிறார்கள்.
இதற்கு வரலாறு பதில் சொல்லும். காலம் எங்களை விடுதலை செய்யும்.
தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சியா இல்லை சந்திரிகா ஆட்சியா என்ற சந்தேகம் வருகிறது என்றார்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications