திமுகவினர் மீது போலீஸ் தாக்குதல்: தமிழகம் முழுவதும் நாளை கண்டனப் பேரணி
சென்னை:
மதுரையில் நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கிய திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துஅக்கட்சியினர் நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளைநடத்துகின்றனர்.
கடந்த 9ம் தேதி மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் ஏழை நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்குதிமுகவினர் ஏற்பாடு செய்தனர். அதற்கு சுமார் 200 அடி தொலைவிலேயே நெசவாளர்களுக்கு முட்டை பிரியாணிவழங்கும் நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் அன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென்று திமுகவினர் மீது போலீசார்தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்பட பல திமுகவினர்காயமடைந்தனர்.
மேலும் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் ஆகியோர் உள்படசுமார் 100 திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து காயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் உள்பட ஐந்து திமுகவினரையும் போலீசார் கைதுசெய்தனர்.
இதற்கிடையே கடந்த 11ம் தேதி அவசரமாகக் கூடிய திமுக நிர்வாகக் குழு, போலீசாரின் இந்த அராஜகச் செயலைக்கண்டித்து 19ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும்பேரணி நடத்த முடிவு செய்தது.
அதன்படி நாளை திமுகவினர் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவுள்ளனர். சென்னை பேரணிக்கு முன்னாள்அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திருச்சியில் நடக்கும் பேரணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும்,கடலூர் பேரணிக்கு க. சுந்தரமும், தஞ்சாவூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், வேலூர் பேரணிக்குதிமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலினும், கரூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும்தலைமை வகிக்க உள்ளனர்.
ஜாமீன் கிடைத்தும் சிறையில் திமுகவினர் தவிப்பு:
இதற்கிடையே ஜாமீன் கிடைத்த பிறகும் 100 திமுகவினர் மதுரை சிறையிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
பழனிவேல்ராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 100 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆனால் ஜாமீன் விடுதலை வழங்குவதற்கான உத்தரவு அன்று மாலை வரை சிறை அதிகாரிகளுக்கு வரவில்லை.இதனால் வெள்ளிக்கிழமை திமுகவினர் சிறையை விட்டு வெளியே வர முடியவில்லை.
மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் திமுகவினர் வெளியே வர முடியாமல் சிறைக்குள்ளேயேதவித்துக் கொண்டிருக்கின்றனர். நாளை காலை தான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications