புதுக்கோட்டை: கார் - ரயில் என்ஜின் மோதலில் தம்பதி, மகன் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே ஆளற்ற ரயில்வே கிராசிங்கில் நுழைந்த கார் மீது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ரயில்என்ஜின் மோதியதில் காரிலிருந்த ஒரு தம்பதியரும் அவர்களுடைய மகனும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (65) என்பவர் தன்மனைவி சிவகாமி (55) மற்றும் மகன் சரவணன் (40) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.சொக்கலிங்கம் சென்னையில் கார் விற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் கிராமத்தில் உள்ள கருப்பர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக அவர்கள்நேற்று சென்று கொண்டிருந்தனர்.
நேற்று காலை சுமார் 11 மணிக்கு திருமயம் அருகே சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஆளற்ற ரயில்வேகிராசிங்கை அவர்களுடைய கார் கடக்க முயன்றது. அப்போது அந்த ரயில் பாதையில் காரைக்குடியிலிருந்துபுதுக்கோட்டை நோக்கி ஒரு ரயில் என்ஜின் வந்து கொண்டிருந்தது.
வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் என்ஜின் ரயில்வே கிராசிங்கைக் கடந்து கொண்டிருந்த கார் மீதுஎதிர்பாராதவிதமாகத் திடீரென்று பயங்கரமாக மோதியது.
இதனால் அந்தக் கார் தூக்கி வீசப்பட்டு நொறுங்கி விழுந்தது. இதில் காரிலிருந்த மூன்று பேரும் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications