தலித்துகளுக்கு பாதுகாப்பு கோருகிறார் ராமதாஸ்
வேலூர்:
தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வன்கொடுமைச் சட்டத்தை தமிழகஅரசு சரியாகப் பயன்படுத்தவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தைத் தமிழக அரசு சரியாகவும்முறையாகவும் பயன்படுத்தவில்லை.
அந்தச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளை அரசு கட்டுப்படுத்தவேண்டும்.
தற்போது வெளியாகும் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளைத் தடுக்க சென்சார் போர்டு தொடர்ந்து தவறிவருகிறது. இதனால் தான் சமூகத்தில் தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நெசவாளர்கள் பசி, பட்டினியால் வாடிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு புறம் கஞ்சித் தொட்டியும், மறுபுறம்ஏட்டிக்குப் போட்டியாக பிரியாணியும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப் போட்டி போட்டு வழங்குவதை விட அரசே, நெசவாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையானஅரிசி மற்றும் பொருட்களை இவலசமாக வழங்க வேண்டும்.
பட்டினியால் வாடிக் கொண்டுள்ள நெசவாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், நிவாரண உதவியும் அளிக்கவேண்டும். அது தான் சரியான உதவியாக இருக்க முடியும்.
காங்கிரஸ் கட்சியுடன், தமாகா இணைந்து விட்டதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.கோஷ்டிகளின் எண்ணிக்கை தான் அங்கு அதிகரிக்கும் என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications