அண்ணா அறிவாயலத்தின் மீது கை வைக்கும் மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புறம் உள்ள பகுதியைக் கையகப்படுத்த சென்னை மாநகராட்சிநடவடிக்கை எடுக்க உள்ளது.

அண்ணா அறிவாலயத்தின் பின் புறம் உள்ள கலைஞர் திருமண மண்டபம் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்றுகூறப்பட்டது. இப்போது அறிவாலயத்தின் முன்புறம் உள்ள பகுதியும் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

அந்த இடத்தை திமுக முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதாக மாநகராட்சியின் நகரமைப்புக் குழுவின் தலைவர் வெற்றிவேல்கூறினார். அண்ணா அறிவாலயத்தின் மாடிப் பகுதியில் தான் சன் டிவி அலுவலகம் உள்ளது.

இது குறித்து வெற்றிவேல் கூறுகையில், அண்ணா அறிவாலயம் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு முன்புறம்உள்ள கார் பார்க்கிங் பகுதி மாநகராட்சிக்குச் சொந்தமானது. அண்ணா சாலையில் உள்ள இந்த மிக முக்கியமான பகுதியில் ஒருசென்ட் இடத்தின் விலையே பல கோடியைத் தாண்டும்.

இந்த இடத்தை திமுக ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதை நாங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றுதெரியவந்ததையடுத்து கார் பார்க்கிங் பகுதியை அண்ணா பூங்கா என திமுக அறிவித்துள்ளது. ஆனால், அங்கு பூங்காவேகிடையாது.

இந்த இடத்தை மீட்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக சென்னை போலீஸ் கமிஷ்னிரிடம் புகார் தந்துள்ளோம் என்றார்வெற்றிவேல்.

இவர் த.மா.காவைச் சேர்ந்தவர். இப்போது அக் கட்சி காங்கிரசில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி கவுன்சிலாக செயல்பட்டுவருகிறார்.

மேயர் கராத்தே தியாகராஜனின் நெருங்கிய நண்பர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக கண்டனப் பேரணி:

மதுரையில் நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கிய திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துஅக்கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர்.

கடந்த 9ம் தேதி மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் ஏழை நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்குதிமுகவினர் ஏற்பாடு செய்தனர். அதற்கு சுமார் 200 அடி தொலைவிலேயே நெசவாளர்களுக்கு முட்டை பிரியாணிவழங்கும் நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

இதனால் அப்பகுதியில் அன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென்று திமுகவினர் மீது போலீசார்தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்பட பல திமுகவினர்காயமடைந்தனர்.

மேலும் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் ஆகியோர் உள்படசுமார் 100 திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து காயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் உள்பட ஐந்து திமுகவினரையும் போலீசார் கைதுசெய்தனர்.

இதற்கிடையே கடந்த 11ம் தேதி அவசரமாகக் கூடிய திமுக நிர்வாகக் குழு, போலீசாரின் இந்த அராஜகச் செயலைக்கண்டித்து 19ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும்பேரணி நடத்த முடிவு செய்தது.

அதன்படி இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர்.

சென்னை பேரணிக்கு முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திருச்சியில் நடக்கும் பேரணிக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும், கடலூர் பேரணிக்கு க. சுந்தரமும், தஞ்சாவூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியும், வேலூர் பேரணிக்கு திமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலினும், கரூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர்சுப்புலட்சுமி ஜெகதீசனும், புதுக்கோட்டையில் பெரியண்ணனும் தலைமை வகித்தனர்.

இன்று இரவு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிபேசுகிறார்.

ரகுபதி வீட்டில் மீண்டும் சோதனை:

அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் ரகுபதியின் வீடுகளில் இன்றும் லஞ்ச- ஒழிப்புப் போலீசார்சோதனை நடத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு தான் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன் மற்றும் ரகுபதியின் வீட்டில்சோதனை நடந்தது. அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களின் ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவைநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ரகுபதியின் புதுக்கோட்டை, சென்னை வீடுகளில் இன்றும் சோதனை நடந்ததால லஞ்ச- ஒழிப்புப் போலீஸ்வட்டாரங்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+