தியேட்டரை தகர்க்க முயற்சி
கடலூர்:
"பாபா"வும் பாமகவும் சமரசம் செய்து கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பி விட்டாலும் பாமக தொண்டர்களும் ரஜினிரசிகர்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மோதலை நேற்று முழுவதும் தொடர்ந்துள்ளனர்.
குறிப்பாக கடலூர், விழுப்புரம் போன்ற வடக்கு மாவட்டங்களிலும் பெங்களூரிலும் இரு தரப்பினரும் நேருக்குநேராக மோதாவிட்டாலும் ஒருவரை ஒருவர் எதிர்த்து சிறிய சிறிய வன்முறைச் சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளனர்.அவற்றின் தொகுப்பு:
"பாபா" தியேட்டரை தகர்க்க சதி:
கடலூரில் "பாபா" படம் திரையிடப்பட்டுள்ள ஒரு தியேட்டரைத் தகர்க்க சதி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி அருகே ஒரு ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு அந்தத் தியேட்டரைத் தகர்க்க அவர்கள்சதி செய்ததாகக் குற்றம் சாட்டி அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
ரசிகர் மன்ற தலைவர் வீட்டுக்கு தீ:
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் எம்.ஏ. ரஜினி இப்ராகிம் வீட்டுக்கு கடந்தசனிக்கிழமை நள்ளிரவு தீவைக்கப்பட்டது.
ரசிகர் மன்ற அலுவலகமும் இவருடைய வீட்டில் தான் செயல்பட்டு வந்தது. தீவைக்கப்பட்டதில் அந்த அலுவலகம்முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு நாயும் பரிதாபமாக தீயில் கருகி இறந்தது.
ராமதாசை எதிர்த்து அறிக்கை விட்டதால் பாமகவினர் தான் இதைச் செய்துள்ளனர் என்று இப்ராகிம் கூறினார்.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
"பாபா" எதிர்ப்பு ஊர்வலம்:
இதற்கிடையே திண்டிவனத்தில் "பாபா" பட எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய 33 பாமகவினரைப் போலீசார் கைதுசெய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் ரஜினி ரசிகர்களைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக மகளிரணியைச் சேர்ந்த 50பேரையும் போலீசார் கைது செய்தனர்.
"பாபா"வில் இடம்பெற்றுள்ள புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகளைக் கண்டித்தும் ரஜினிரசிகர்களைக் கண்டித்தும் இந்தப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் எச்சரிக்கை:
இதற்கிடையே "பாபா" படம் திரையிடப்படுவதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழகப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் "பாபா"-பாமக விவகாரம் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றவிவரம் தெரியவில்லை.
கைதானவர்களின் எண்ணிக்கை விவரம் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை என்று தமிழக டி.ஜி.பியானநெய்ல்வால் நேற்று கூறினார்.
பெங்களூரில் கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே பெங்களூரில் ரஜினி ரசிகர்கள் பாமக நிறுவனர் ராமதாசின் கொடும்பாவியை எரித்தனர்.
பெங்களூரில் உள்ள அல்சூர் பகுதியில் ராமதாசின் உருவபொம்மையை ஊர்வலமாகக் கொண்டு வந்த ரஜினிரசிகர்கள் "லாவண்யா" தயேட்டர் எதிரில் அதை எரித்தனர்.
முன்னதாக ஊர்வலத்தின் போது ராமதாசைக் கடுமையாகக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.
"தமிழர்கள் பாதுகாப்பு":
கர்நாடகத்தில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நினைக்கும் தமிழகத் தலைவர்கள் ராமதாசைக்கண்டிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சந்திரகாந்த் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் ராமதாசைக் கண்டித்து அறிக்கை விட வேண்டும்என்றும் ரஜினி ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே "நாகா" தியேட்டர் பகுதியில் "பாபா" ஊர்வலத்தை நடத்தி ரஜினி ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினர்.
நேருபுரம் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் கார்ப்பரேஷன் குடியிருப்பில் 1,000 பேருக்கு உணவு வழங்கியும்ரசிகர்கள் அசத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications