போலீசாரின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக போலீசாரிடம் குறைகளைக் கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றுவதற்காக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 14 வரை ஐந்து கட்டமாக சுமார் 8,150 தமிழகப் போலீசார்,சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் நேரில் குறைகள் கேட்டார் ஜெயலலிதா.அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் அவர்.
பணி இடமாற்றம் முதல் மருத்துவ உதவி வரை பல்வேறு கோரிக்கைகளை ஜெயலலிதாவிடம் போலீசார்தெரிவித்தனர். நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர்களிடம்ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்படி பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான போலீசாரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படிஇன்று அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பணியின் போது மரணமடைந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரின்வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தகுதியுள்ள போலீசாருக்கு இடமாற்றத்திற்கான உத்தரவும் உடனடியாக செயல்படுத்தப்படும்.
சீருடைப் பணியாளர்களின் வேலை மிகவும் சிரமமானது என்பதால் மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அவர்கள் மேலும் புத்துணர்ச்சியுடன் சிறந்த முறையில்பணியாற்றுவார்கள்.
ஏராளமான பெண் போலீசார் வேலையைப் பார்த்துக் கொண்டு தங்களுடைய கைக்குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே பெண் போலீசாரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக நன்கு பயிற்சி பெற்ற ஆயாக்களைக்கொண்ட குழந்தை காப்பகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications