சச்சிதானந்த சுவாமி மரணம்: அமெரிக்காவில் இறுதிச் சடங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rajini and sachidhaandha swamighalநடிகர் ரஜினிகாந்தின் குருவும் பாபா படம் வெளியாக முக்கிய காரணமாகவும் இருந்த சச்சிதானந்த மகராஜ் சுவாமிகள் இன்றுகாலை மரணமடைந்தார். அவரது உடல் இன்று இரவு மும்பை வழியாக அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறது. ரஜினிகாந்தும்அமெரிக்கா சென்று இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறார்.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தனது 35 வயதிலேயே அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஆன்மிகப்பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் விர்ஜினியாவில் மிகப் பெரிய ஆஸ்ரமத்தை அமைத்துள்ளார்.

இந்த ஆஸ்ரமத்துக்கு ரஜினி காந்த் கடந்த சில ஆண்டுகளாக சென்று வருகிறார். தனது குருவாகவும் சச்சிதானந்த சுவாமிகளைரஜினி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த ரஜினியை பாபா படம் எடுக்கச் சொன்னதேசச்சிதானந்த சுவாமிகள் தான்.

படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் கடந்த 14ம் தேதி இதனை ரிலீஸ் செய்ததும் இந்த சுவாமிகள் தான். சென்னை சத்யம்தியேட்டரில் பூஜை நடத்தி இந்தப் படத்தை சுவாமிகள் வெளியிட்டார். இதன் பின்னர் தான் 15ம் தேதி தமிழகம் முழுவதும் படம்வெளியானது.

14ம் தேதி பூஜை நடத்தி முடித்தபோதே சச்சிதானந்த சுவாமிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சைதரப்பட்டது.

இந் நிலையில் நேற்று சச்சிதானந்த சுவாமிகளுக்கு திடீரென மீணடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னைராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவரம் தெரியவந்தவுடன் ரஜினி மருத்துவமனைக்கு விரைந்தார்.நெடுநேரம் மருத்துமனையில் இருந்தார்.

அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து ஐ.சி.யுவில் வைக்கப்பட்டு மிகத் தீவிர சிகிச்சை தரப்பட்டது. ஆனால்,சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.45 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 88. அவரது மரணச் செய்தி அறிந்தவுடன் இன்று அதிகாலை தனது மனைவி லதாவுடன் மருத்துவமனைக்குவந்து மரியாதை செலுத்தினர். சுவாமிகளின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில்நடைபெறவுள்ளன. இதற்காக அவரது உடல் இன்று மாலை அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறது.

Sachidhanandha Swamigalரஜினியும் அமெரிக்கா செல்வார் என்று தெரிகிறது. உடலை அமெரிக்கா கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ரஜினியும்சச்சிதானந்த சுவாமிகள் ஆஸ்ரமும் இறங்கியுள்ளனர்.

இறப்பு முன்பே தெரியும்:

கோவை மாவட்டத்தில் உள்ல சச்சிதானந்த சுவாமிகள் மடம் மற்றும் பள்ளியின் நிர்வாகியான ராமசாமி கூறுகையில்,

தனது மரணம் குறித்து கடந்த மாதமே எங்களிடம் சுவாமிகள் தெரிவித்துவிட்டார். நான் எங்கு இறந்தாலும் உடலைவிர்ஜீனியாவில் உள்ள லோட்டஸ் ஆஸ்ரமத்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதற்காக ஒருசமாதியை அவர் தனது ஆஸ்ரமத்தில் தயார் நிலையில் வைத்துள்ளார்.

தனது உடலுடன் சில பொருட்களையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவரது ஆசைப்படி அனைத்தும்செய்யப்படும் என்றார்.

சுவாமிகளின் இறுதிச் சடங்கு புதன்கிழமை அமெரிக்காவில் நடக்கிறது. இந்த சடங்குகளை கோவையைச் சேர்ந்த ராமலிங்கசுவாமிகள் நடத்தி வைக்கவுள்ளார்.

பாபா படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை இந்த சுவாமிகளின் பேரனுக்குத் தான் ரஜினி கொடுத்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+