"வாஜ்பாய் 31" - தமிழ் கவிதைத் தொகுப்பு வெளியீடு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் எழுதிய 31 கவிதைகள் "வாஜ்பாய் 31" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுடெல்லியில் வெளியிடப்பட்டது.
மத்திய திட்டக்குழு உறுப்பினரான கி. வெங்கட சுப்பிரமணியன் தான் வாஜ்பாய் கவிதைகளைத் தமிழில்மொழிபெயர்த்துள்ளார்.
வாஜ்பாயின் இல்லத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் கே.சி. பந்த் "வாஜ்பாய் 31" நூலை வெளியிட முதல் பிரதியை வாஜ்பாய் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாஜ்பாய் பேசுகையில்,
நம் இந்திய நாட்டை நதிகள் எவ்வாறு இணைக்கின்றனவோ அதே போலவே இந்திய மக்களை மொழிகள்இணைக்கின்றன. அவை நம்மைப் பிரிப்பது கிடையாது.
வெளிப்படையான வேறுபாடுகளும் சில சமயங்களில் ஏற்படுகின்ற பேதங்களும் கூட உண்மை கிடையாது. நமதுஅடிப்படை பார்வை தேசியம் மட்டுமே.
இந்த நூலை நான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியையும் தமிழையும் எதிரெதிர் துருவங்கள் என்று சிலர் எண்ணியது உண்டு.அண்ணாவும் இந்திக்கு எதிரானவர் என்று கூறியவர்களும் உண்டு. அதைப் பொய்யாக்கவே அவருக்கு இந்தநூலை நான் காணிக்கையாக்குகிறேன்.
தரம் வாய்ந்த இலக்கியங்களை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளதுஎன்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து இந்திக்கும் இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்து அனைவரையும்படிக்கச் செய்ய வேண்டும் என்றார் வாஜ்பாய்.
"வாஜ்பாய் 31" நூலை மதிப்புரை செய்து கவிப் பேரரசு வைரமுத்து பேசினார்.
கலாம் வாழ்த்து:
இதற்கிடையே இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
அருமையான தமிழ் உள்ளத்துடன் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளீர்கள் என்று வெங்கட சுப்பிரமணியனைடாக்டர் கலாம் வாழ்த்தியுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் "வாஜ்பாய் 31" நூலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications