விரைவில் தாமரைக்கனி கைதாகலாம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைத் தரக் குறைவாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தாமரைக்கனிக்கு முன் ஜாமீன் அளிக்க சென்னைஉயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய தாமரைக்கனி, முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாகவிமர்சித்தார். பெற்ற தாயை மதிக்க மறுக்கிறார்கள். ஆனால், யாரையோ அம்மா என்று அழைக்கிறார்கள். அவர் என்ன உன்னைப் பெற்றதாயா? பாலூட்டி வளர்த்தாரா என்ற ரீதியில் பேசியிருந்தார் தாமரைக்கனி.
இதையடுத்து அவதூறாகப் பேசியதாக தாமரைக்கனி மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்தன்னை போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதால் தனக்கு முன் ஜாமீன் தருமாறு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாமரைக்கனி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் இன்று அளித்த தீர்ப்பில் தாமரைக்கனிக்கு முன் ஜாமீன் தர மறுத்துவிட்டார்.
இதனால் தாமரைக்கனி மிக விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்துவிட்டதாமரைக்கனி சமீபகாலமாக ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications