எதிர்க் கட்சிகள் எங்களை தூண்டவில்லை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் மறுப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டங்களை திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தான் தூண்டிவருகின்றன என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்மறுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தை திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தான் தூண்டிவருகின்றன என்று நேற்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த நான் தயாராகவேஉள்ளேன் என்றும் கூறினார்.
ஆனால் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இதைக் கடுமையாக மறுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாகஇதுகுறித்து தமிழக அரசுடன் நாங்கள் நடத்திய பேச்சுக்கள் பலனளிக்காத காரணத்தால் தான் தற்போதுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சுவாமிநாதன் கூறுகையில்,
இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த ஜெயலலிதா சம்மதித்துள்ளார். இது எங்களுக்கு மிகவும்சந்தோஷத்தை அளித்துள்ளது. இதற்காக அவர் எங்களை அழைக்கும் போது கட்டாயம் சென்று பேசுவோம்.
ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு முழுமையாகத் தீர்வு கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்துநடைபெறும் என்றார் சுவாமிநாதன்.
ஜெ.க்கு மதிமுக கண்டனம்:
இதற்கிடையே அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை எதிர்க் கட்சிகள் தான் தூண்டி விட்டுள்ளன என்றுஜெயலலிதா கூறியதை மதிமுகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.
போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திபிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications