பெண் போலீசார் நியமனத்திற்கு சலுகைகள்: அள்ளி வழங்கினார் ஜெ.
சென்னை:
பெண் போலீசார் நியமனங்களுக்கான உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புவழங்கும் விதமாக ஏகப்பட்ட சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் முழுவதிலும் பெண் காவலர் பதவிக்கான முதல் கட்டத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமானபெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆனால் உடல் தகுதித் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் பல பெண்கள் ஓட்டப் போட்டியின்போது மயங்கிவிழுந்தனர். இதனால் பல பெண்கள் தேர்வில் தகுதி பெறவில்லை.
தேர்வு முறை மிகவும் கடுமையாக இருப்பதாக தேர்வுக்கு வந்த பெண்கள் கருதுவதாக முதல்வரின் காதுகளுக்குத்தகவல் போனது. இதையடுத்து விதிமுறைகளைத் தளர்த்தி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர். அவர்வழங்கியுள்ள சலுகைகள்:
- 7 நிமிடத்தில் 1,500 மீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும் என்ற முந்தைய விதிமுறையைத் தளர்த்தி, 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்தால் போதும்.
- 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தூரத்தை அடையும் நேரத்தில் 2 விநாடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- நீளம் தாண்டுதல் தூரம் 3.5 மீட்டர் என்பதிலிருந்து 3.25 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
- குண்டு எறிதலில் 5.2 மீட்டர் என்ற தூரத்திற்குப் பதில் 4.5 மீட்டர் தூரத்திற்கு எறிந்தாலே போதும்.
- பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் உயரம் 160 செ.மீட்டராகவும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த பெண்களின் உயரம் 157 செ.மீட்டராகவும் இருக்க வேண்டும் என்று முந்தைய விதி இருந்தது. இப்போது அனைத்துப் பிரிவு பெண்களும் 157 செ.மீட்டர் உயரமும், ஆதிதிராவிடப் பிரிவு (எஸ்.சி.) 155 செ.மீ. உயரமும் இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் ஏற்கனவே தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்த பெண்கள் மீண்டும்தேர்வில் கலந்து கொண்டு வெற்றிக்கு முயலலாம் என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
பெண் காவலர் தேர்வு மூலம் 1,659 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களின் தேர்வு மூலம் மாநிலத்தில்உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 பெண் காவலர்கள்நியமிக்கப்படவுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications