ஜெ.க்கு எதிரான டான்சி வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 27ம் தேதிக்குஒத்திவைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (20ம் தேதி) இந்த விசாரணை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அன்று நேரமின்மைகாரணமாக இவ்வழக்கு புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக அதிமுக வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பியுமான என். ஜோதியும், திமுக வழக்கறிஞரும் ராஜ்யசபாஎம்.பியுமான சண்முகசுந்தரமும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் புதன்கிழமை நடைபெற வேண்டிய வழக்குகளின் பட்டியலிலும் டான்சி வழக்கு இடம்பெறவில்லை.இதையடுத்து புதன்கிழமையும் நேரமின்மை காரணமாக இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வரும்27ம் தேதி கூடுகிறது. அப்போது தான் டான்சி வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அதே 27ம் தேதி தான் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டம்நடைபெறுகிறது என்பதும் ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications