ஸ்தம்பிக்கின்றன தமிழக நீதிமன்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோர்ட் கட்டணத்தை தமிழக அரசு திடீரென்று உயர்த்தியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்இன்று முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்.

ஏற்கனவே சிவில் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களைபூட்டுவது, நீதிபதிகளை மிரட்டுவது போன்ற அடாவடி செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கோர்ட் கட்டண உயர்வை எதிர்த்து இன்று முதல் புதிய போராட்டத்தை வழக்கறிஞர்கள்ஆரம்பித்துள்ளனர்.

நீதிமன்ற வழக்குகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டியும், தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அதேசமயம், அதிமுக வக்கீல்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளனர். மேலும் வக்கீல்களில் ஒரு பிரிவினரும் இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளனர்.

இருப்பினும் பெரும்பான்மையான வக்கீல்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதால் உயர்நீதிமன்றம் உள்பட தமிழகம்முழுவதும் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+