கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை:
தலைவர்களே இல்லாமல் இயங்கி வரும் கீரிப் பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகஞ்சியேந்தல்ஆகிய தலித் பஞ்சாயத்துகளைக் கொண்ட கிராமங்களுக்கு வரும் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய எஸ்.சி, எஸ்.டி நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதில் கீரிப்பட்டி, பாப்பாபட்டிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், தலித்தை பஞ்சாயத்துத்தலைவராக ஏற்க மாட்டோம் என அந்த ஊரைச் சேர்ந்த அடாவடி உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதால்தேர்தலில் யாரும் நிற்க மறுத்துவிட்டனர்.
பின்னர் மிகுந்த சிரமத்துக்கு இடையே இரு கிராமங்களில் ஒரு தாழ்த்தப்பட்டவர் மட்டும் போட்டியிட்டனர்.வெற்றியும் பெற்றனர். ஆனால், தலைவர் பதவியில் அமர மறுத்துவிட்டனர்.
தலைவர் பதவியில் அமர்ந்தால் கொன்றுவிடுவோம் என உயர் ஜாதியினர் மிரட்டியால் அவர்கள் பதவியேற்றஉடனேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.
அடாவடி செய்யும் இந்த மேல் ஜாதியினரை அடக்க தமிழக அரசு தவறிவிட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் தலைவராகஇருக்க வேண்டிய இந்த பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிகளை தமிழக அரசு காலியாகவே வைத்துள்ளது.
இதையடுத்து உடனே தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி நல வாரியத்தின்பிராந்திய இயக்குனர் கண்ணகி பாக்கியநாதன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
நான்கு பஞ்சாயத்துக்களிலும் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிப்போயின. இந் நிலையில் பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டியில் மட்டும் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும்,தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.
இதுகுறித்து டெல்லியில் ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் மதுரை கலெக்டர்உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வரும் அக்டோபர் மாதத்திற்குள் நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
தலித்தை தலைவார ஏற்க மறுக்கும் இந்த நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் நிதியுதவியை உடனடியாக அரசு நிறுத்தவேண்டும். அரசின் முயற்சிகளை மக்கள் உணர இது வழி செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை இங்குஅனுப்பி அங்குள்ள மக்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று கூறியுள்ளார் கண்ணகி பாக்கியநாதன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications