இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் புரளி

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா மிக பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான்கூறியுள்ளது. ஆனால், இதை இந்தியா முழுக்க முழுக்க மறுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

காஷ்மீரின் வடக்குப் பகுதியில் தராஸ் (இந்தியப் பகுதி)- குல்தாரி (பாகிஸ்தான் பகுதி) எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின்ராணுவ கண்காணிப்பு முகாமின் மீது இந்தியா திடீரென தாக்கியதாகவும் இதில் தங்கள் தரப்பில் எந்த உயிர்ச் சேதமும்ஏற்படவில்லை என்றும் ஆனால், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் 60 இந்திய வீரர்கள் பலியாகிவிட்டதாகவும் பாகிஸ்தானின்ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் மிராஜ்- 2000 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியத் தரப்பில் ஒரு வீரர்கூட உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவப் படையினரை விமானத் தாக்குதல்நடத்தி விரட்டியடித்தது இந்தியா. அது போன்று ஏதாவது ஒரு தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அதைபாகிஸ்தான் ஊதிப் பெரிதாக்கி பொய்யான செய்தியைப் பரப்புவதாகத் தெரிகிறது.

திராஸ் பகுதியில் பாகிஸ்தான் படைகள் கனரக துப்பாக்கிகளால் தாக்கியதாகும் இந்தியா பதிலடித் தாக்குதல் நடத்தியதாகவும்இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்டெல்லி வந்துள்ள நிலையில் இந்தப் புரளியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+