ரஷ்யா மூலம் அமெரிக்காவை அமுக்கிய இந்தியா
டெல்லி:
எல்லைப் புற பதற்றம் குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தியா வந்துள்ளநிலையில், தீவிரவாதிகளைத் தடுக்க பாகிஸ்தான் முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போரைத் தடுத்ததில் முக்கிய பங்கு வகித்த ஆர்மிடேஜ் இன்று காலை டெல்லி வந்தார். அவர் பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டசுடன் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, வெளியுறவுத்துறைச் செயலாளர்கன்வால் சிபல் ஆகயோரையும் அவர் இன்று அவர் சந்திக்க உள்ளார்.
தீவிரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் தடுத்துவிட்டதால் உடனே காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்என இந்தியாவை அவர் நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தீவிரவாதிகள் ஊடுருவல் விஷயத்தில் அமெரிக்காவின் நிலையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஆர்மிடேஜ் தங்களை நிர்பந்திப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்த்த இந்தியா அதை ரஷ்யா மூலமாகசமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆர்மிடேஜ் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில் மாஸ்கோவில் நிருபர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை இணையமைச்சர்வியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ்,
தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மூடாதவரை அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது. இந்தியாவுடன்எப்படி உறவை வளர்த்துக் கொள்வது என்பதை முதலில் முஷாரப் கற்றுக் கொள்ள வேண்டும். உறவு சீரடைய ஒரே வழி பாகிஸ்தான் அரசுநடத்தி வரும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும்.
இதுவரை பாகிஸ்தான் திருந்தியதாகத் தெரியவில்லை. அந்த நாடு இதுவரை எல்லா செயல்களையும் தவறாகவே செய்து வருகிறது.
அமெரிக்காவின் நெருக்குதால் ஏதோ பேச்சுக்குத் தான் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போதாது.
காஷ்மீரை சர்வதேச பிரச்சனையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற இந்தியாவின் கருத்தை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது.
முஷாரபால் ஐ.எஸ்.ஐயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐ.எஸ்.ஐசின் தீவிரவாத ஆதரவு மாறியதாகத் தெரியவில்லை என்றார்வியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ்,
வியாச்சஸ்லாவ் ட்ரூப்னிகோவ் அமைச்சராவதற்கு முன் ரஷ்ய உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று இந்தியா வந்துள்ள ஆர்மிடேஜ் நாளை பாகிஸ்தான் செல்கிறார்.
வாஜ்பாய் அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய் வரும் 9ம் தேதி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஓராண்டுநிறைவடைவதையொட்டி ஐ.நா. சபையில் நடக்கும் மாநாட்டில வாஜ்பாய் பேசுகிறார்.
12ம் தேதி அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும் சந்தித்துப் பேசுகிறார். 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை வாஜ்பாய்அமெரிக்காவில் இருப்பார்.
லண்டனில் அத்வானி:
இதற்கிடையே துணைப் பிரதமர் அத்வானி இரண்டு நாள் பயணமாக நேற்று லண்டன் சென்றார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ள தேர்தல்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருவதை அவர் இங்கிலாந்து வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜேக் ஸ்ட்ராவிடம் விளக்கினார்.
காஷமீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்தில் உள்ள பல அமைப்புகள் நிதி திரட்டுவதையும் சுட்டிக் காட்டிய அத்வானிஅதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், அத்வானியுடன் பேசிய இங்கிலாந்து அமைச்சர் குஜராத் மதக் கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாகவே நீண்ட நேரம்விவாதித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications