சட்ட திருத்தத்தை திருப்பி அனுப்பினர் அப்துல் கலாம்
டெல்லி:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றங்கள் செய்து மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதாவை ஜனாதிபதி அப்துல் கலாம்திருப்பி அனுப்பிவிட்டார்.
சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சில சந்தேகங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கலாம் அது குறித்த விவரங்களைத் தருமாறுமத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கிரிமினல்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சரவை கூடி இதில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திருத்தங்கள கிரிமினல்அரசியல்வாதிகளுக்கு வசதியான வகையில் அமைந்துள்ளது. இந்தச் சட்டத் திருத்ததுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கேட்டு அனுப்பிவைத்தது.
கேள்விக்குள்ள விவகாரம் எது?
ஆனால், புதிதாக செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தில் முக்கியமான குறைபாடு உள்ளதாக ஜனாதிபதி கலாம் கருதுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஏதாவது வழக்கில் தண்டனை பெற்றிருந்தால் அது குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்கஇந்தத் திருத்த்தில் வழி வகை செய்யப்படவில்லை.
அதாவது வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதி அதை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என்றரீதியில் இந்தச் சட்டத்திருத்தம் உள்ளது. மேலும் 2 முறை தண்டனை பெற்ற அரசியல்வாதியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் தேர்தல் கமிஷனின்விதிமுறையையும் இந்தச் சட்டம் தளர்த்தியுள்ளது.
கலாம் கேள்வி:
வழக்கில் தண்டனை பெற்ற வேட்பாளர் அந்த விவரத்தை தேர்தல் கமிஷனிடம் ஏன் தெரிவிக்கக் கூடாது, அதை ஏன் வேண்டாம் என்றுநினைக்கிறீர்கள் என்று கேட்டு இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் கலாம்.
பொதுவாக இந்திய ஜனாதிபதிகள் இது போன்ற கேள்விகளை எல்லாம் கேட்பதில்லை. மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை அனுப்பினால்அதில் ஒரு கையெழுத்தைப் போட்டு அனுப்பி வைக்கும் ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதிகளாகத் தான் இருந்து வந்தனர்.
ஆனால், தன்னிடம் வந்த முதல் சட்ட மசோதாவையே மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் கலாம். முன்னதாகஇந்தச் சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள சட்ட நிபுணர்களுடன் கலாம்ஆலோசனையும் நடத்தினார்.
இதன் பின்னர் தான் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் கலாம். கலாமின் சந்தேகங்கள் குறித்து மத்திய அமைச்சரவை நாளைஅவசரமாகக் கூடி விவாதிக்கவுள்ளது. இதன் பின்னர் தேவைப்பட்டால் ஜனாதிபதியால் கேள்வி எழுப்பப்பட்ட விஷயங்களை நீக்கிவிட்டுமீண்டும் இந்த சட்ட மசோதா கலாமிடம் அனுப்பப்படும்.
முன்னதாக சில தினங்ளுக்கு முன தன்னைச் சந்தித்த பிரதமர் வாஜ்பாயிடமும் கூட இந்தச் சட்டத் திருத்தங்கள் குறித்து கலாம் கேள்விஎழுப்பியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சட்ட அமைச்சர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ஜனாதிபதியை நான் நேரில் சந்தித்து அவரதுசந்தேகங்களுக்கு விளக்கம் தருவேன் என்றார்.
அதே நேரத்தில் கூட்டுறவு அமைப்புகள் தொடர்பான இரு சட்டத் திருத்தங்களுக்கு கலாம் உடனடியாக ஒப்புதல் தந்துவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications