கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அபாயகரமான கசிவு
கல்பாக்கம்:
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அபாயம் மிக்க கதிர்வீச்சு (Radiation) கசிந்துள்ளது.
இதில் அங்கு பணிபுரிந்த தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஊழியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும்காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரியும் சில ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கல்பாக்கத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் சில வாரங்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், மிக ரகசியமான ஆராய்ச்சிமையம் என்பதால் இந்த விவரம் மறைக்கப்பட்டுவிட்டது.
இந்த கதிர்வீச்சு கசிவு தொடர்பாக தேசிய அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக நடந்த இந்த விசாரணையில் அங்கு கதிர்வீச்சு கசிந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவம் விபத்து இல்லை என்றும் ஊழியரின் தவறால் (Human error) தான் ஏற்பட்டதாகவும் மற்றபடி அணு உலைபாதுகாப்பாகவே உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பெயர் விவரத்தை அணு மின் நிலையம் வெளியிடவில்லை. மேலும் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குதரப்பட்ட சிகிச்சையின் விவரமும் தெரியவில்லை.
முழு அளவில் ரகசியம் பாதுகாக்கப்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கு மேல் விவரங்களைப் பெற முடியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications