ஸ்டாலின் ஆதரவாளர் மீது கருணாநிதி கோபம்
சென்னை:
அழகிரியைக் கடுமையாக எதிர்த்து வரும் மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரன் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அழகிரியின் தொல்லைகளுக்கு எதிராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரனும்எதிர்ப்புக் குரல் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்.
செ.ராமச்சந்திரன் தேனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் பதவியை ஸ்டாலினிடம்ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.
ராமச்சந்திரனின் இந்தப் பேட்டி கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருணாநிதி கூறுகையில்,செ.ராமச்சந்திரன் தனது எல்லையை மீறி பேசியுள்ளார். ஸ்டாலினைப் பற்றிப் பேச இவர் யார்?. இதுபோன்றவிஷயங்களை தனி நபர் பேசுவதற்கு திமுக விதிமுறைகள் அனுமதிக்காது.
கொஞ்ச நாளாகவே இவரது நடவடிக்கைகள் சரியில்லை. என்னைக் கேட்காமல், ஜெயலலிதாவைப் பார்த்தார்.பார்த்த பின்பு மரியாதைக்குக் கூட என்னை வந்து பார்க்கவில்லை.
முன்பு இவர் மதிமுகவுக்குப் போய்விட்டு திமுகவுக்கு திரும்பி வந்தார். மதிமுகவில் இருந்தபோது எனதுகொடும்பாவியை எரித்தவர் தான் இந்த ராமச்சந்திரன் என்பதை நான் மறக்கவில்லை.
ஸ்டாலின் குறித்துப் பேசியதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேலாவது ஒழுங்காக நடந்துகொள்வேன் என்று உறுதி கூற வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கருணாநிதி.
மூத்த தலைவர் பழனிவேல்ராஜனை நேரடியாகத் திட்ட முடியாது என்பதால் ராமச்சந்திரனை கருணாநிதிகடுமையாகக் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
அதே சமயம் கருணாநிதியின் இந்தப் பேச்சு திமுகவினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டாலினைத்தான் கருணாநிதி ஆதரித்து வருகிறார் என்று நினைத்திருந்த திமுகவினர் மத்தியில் நலவும்போது,ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான செ.ராமச்சந்திரன் மீது கருணாநிதி கடுமையாக பாய்ந்திருப்பதுஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதி மாறி விட்டாரோ என்ற குழப்பம் திமுகவினர் மத்தியில்எழுந்துள்ளது. அப்படி இருந்தால் அது கட்சிக்கு நல்லதல்ல என்றே பெரும்பான்மை திமுகவினர் கருதுகின்றனர்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications