வி.பி. சிங் உதவியுடன் டெல்லியில் கட்டப்படும் பெரியார் மையம்
டெல்லி:
டெல்லியில் பெரியார் மையத்தின் கட்டடத்தை அம் மாநில நகர வளர்ச்சிக் குழுமம் உடைத்ததையடுத்து அங்கு ரூ. 6 கோடி செலவில் புதியபெரியார் மையத்தைக் கட்ட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.
பாம்நொலி பகுதியில் இருந்த பெரியார் மையக் கட்டம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி டெல்லி அரசு தகர்த்தது.ஆனால், இதை திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தை கி.வீரமணியோடு சேர்ந்து கையில் எடுத்துப் போராடியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தான். கட்டடஇடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய அவர் சமீபத்தில் வீரமணியை அழைத்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். உடனேபெரியார் மையம் கட்ட மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என வாஜ்பாயிடம் வலியுறுத்தினார் சிங்.
இதையடுத்து டெல்லியில் உடனே மாற்று நிலம் ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் பேசி தெற்கு டெல்லியில் மதுரா-நொய்டா சாலையில் ஜெசோலாஎன்ற இடத்தில் 1 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
நிலத்தை ஒதுக்க டெல்லி ஆளுநருடனும் வி.பி.சிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ரூ. 1.96 கோடி செலவில் பெரியார் மையம், கம்ப்யூட்டர் கல்வி மையம், நூலகம், பெரியார் பண்பாட்டு மையம், எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மாணவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு விடுதி, கான்ப்ரன்ஸ் ஹால் ஆகியவை அமைக்கப்பவுள்ளன. இந்தக் கட்டடத்தின்கட்டுமானப் பணியை நேற்று வி.பி.சிங் துவக்கி வைத்தார்.
10 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டடமாக இது உருவாகும் என உடன் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிதெரிவித்தார். முதல்கட்டமாக ரூ. 6 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications