ஏட்டிக்கு போட்டி போஸ்டர்கள்
மதுரை:
அழகிரி விவகாரம் தொடர்பாக இனி திமுக தலைமையுடன் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுன்னாள் சபாநாயகரும் மூத்த திமுக தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறினார்.
லண்டன் பி.பி.சி. தமிழோசைக்கு நேற்று (வியாழக்கிழமை) அவர் அளித்த பேட்டி விவரம்:
எல்லாக் கட்சிகளிலும் உள்கட்சிப் பூசல், பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இங்கே உள்ளபிரச்சனையோ மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
இனி திமுக தலைமையுடன் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. யாருடன் இது தொடர்பாக நான் பேசவும்முயற்சிக்கவில்லை.
இனி ஒன்றுமே இல்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் அவர்களிடம் போய் என்னத்த பேசுறது என்றார்பி.டி.ஆர்.
திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தீர்களா என்று பி.பி.சி. செய்தியாளர் கேட்டதற்கு, "அவர் கிட்ட போகமுடியுமா? சாதாரணமா நெருங்கக் கூடிய தூரத்திலா அவர் இருக்கிறார்?" என்று பி.டி.ஆர். பதிலளித்தார்.
இதற்கிடையே போஸ்டர்களுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரத்தில் திமுக கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தும்போஸ்டர்களும் நூற்றுக்கணக்கில் ஒட்டப்பட்டுள்ளன.
"அழகிரியே அடங்கு", "கோழி சாப்ஸ் அழகிரியே..." என்று ஸ்டாலின் தரப்பினரும் "பி.டி.ஆரே வெளியே போ", "நீஎல்லாம் மூத்த தலைவனா?..." என்று அழகிரி தரப்பினரும் மாற்றி மாற்றி பல்வேறு கொச்சை வசனங்கள் அடங்கியபல வண்ண போஸ்டர்களை அச்சடித்து மதுரை சுவர்கள் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
திமுகவினரின் இந்தக் கோஷ்டிப் பூசல் போஸ்டர்களால் மதுரை சுவர்களும், பஸ்களும் நாறத் தொடங்கியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications