எனக்கு கோடிக்கணக்கில் சொத்து இல்லை: வீரபாண்டி ஆறுமுகம்
சேலம்:
தனது வீட்டில் லஞ்ச-ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கான அளவுக்கு சொத்துப் பத்திரங்கள் ஏதும்சிக்கவில்லை என முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறுத்துள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர், தன் மீது அவதூறான செய்திகளைப் பரப்பும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கைகள், செய்தித்தொடர்பு சாதனங்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக மிரட்டினார்.
திமுக ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதாக இவர் மீதும், கட்டப் பஞ்சாயத்து,காண்ட்ராக்ட்கள் மூலம் பணம் சுருட்டியதாக இவரது மகன் மீதும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
எல்லா அரசியல்வாதிகளையும் போலவே இவரும் தனது சொத்துக் குவிப்பை மறுத்து வந்தார். இந் நிலையில் கடந்த 17ம் தேதி அவருக்குச்சொந்தமான வீடுகள், பெட்ரோல் பங்குகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
திலகவதி ஐ.பி.எஸ்சின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ரெய்டுகள் நடந்தன.
வீரபாண்டி ஆறுமுகத்துக்குச் சொந்தமான சென்னையில் தி.நகரில் உள்ள வீடு, செங்குன்றம் வீடு உள்பட 3 வீடுகளிலும், சேலம்பூலாவாரியில் உள்ள வீட்டிலும், சேலத்தில் உள்ள 2 பெட்ரோல் பங்குகளிலும், தர்மபுரியில் உள்ள அவரது மகளின் வீட்டிலும் சோதனைகள்நடந்தன.
இந்த ரெய்டுகளில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள்சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
வழக்கு போடுவேன்: ஆறுமுகம்
ஆனால், இதை ஆறுமுகம் மறுத்துள்ளார். இன்று சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், எனது சென்னை தி.நகர் வீட்டில் செலவுக்குவைத்திருந்த ரூ. 50,000த்தையும் சேலம் பூலாவாரி வீட்டில் எனது பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் தான் எடுத்துச்சென்றனர்.
ஆனால், சில காவல்துறை அதிகாரிகள் எனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மதிப்பு நகைகள், பணம்,சொத்துப் பத்திரங்களை எடுத்துச் சென்றதாக வதந்தி பரப்புகின்றனர்.
சில பத்திரிக்கைகளும் இது போன்ற செய்திகளை பரப்புகின்றன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications