கல்லூரி ஆசிரியர் போராட்டம் தீவிரமடைகிறது
சென்னை:
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளவேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைகிறது.
தமிழகம் முழுவதிலும் உள்ள 64 அரசுக் கல்லூரிகளையும் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
அரசின் முடிவை எதிர்த்து பலவிதங்களில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தற்போது காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக அரசுக் கல்லூரிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
அரசுக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கல்லூரி விடுதிகளை அடைக்க அரசு உத்தரவிட்டுவிட்டது. இதனால் மாணவ, மாணவியர்விடுதிகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகம் முழுவதிலும் வரும் செப்டம்பர் 3ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும்ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் நிலைமை மேலும் மோசமாகும் என்று தெரிகிறது.
அரசுக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
இதற்கிடையே அரசு கல்லூரி ஆசிரியர்கள் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், அரசுக் கல்லூரி ஆசிரியர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளின் பின்னணி இருப்பதாக கூறி அவர்களது போராட்டத்தைஅரசியலாக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதுதவிர, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்,காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு சம்பா பயிருக்காவது உரிய காவிரி நீரை வழங்க வேண்டும், கோர்ட்கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications