தேர்தல் கமிஷ்னர் மீது மதரீதியில் விமர்சனம்: பா.ஜ.கவுக்கு கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைத்த தலைமை தேர்தல் கமிஷ்னர் லிங்டோவின் மதத்தைக் குறிப்பிட்டு அம் மாநில பா.ஜ.க. பேசியிருப்பதுகடுமையாகக் கண்டிக்கத்தத்து என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
குஜராத்தில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை என்று கூறி அங்கு தேர்தல் நடத்த கமிஷன் மறுத்துவிட்டது.
அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. இதன்மூலம் மதக் கலவரத்தில் பெரும்விமர்சனத்துக்கு உள்ளான முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான தங்களது ஆட்சியிலேயே தேர்தலை சந்தித்துவிடலாம் என்றபா.ஜ.கவின் திட்டத்தை தேர்தல் கமிஷன் தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையரை மோடி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு கிருஸ்தவர் என்பதால் தான்இந்துவான எனக்கு எதிரான முடிவை எடுத்துள்ளார் என்று முதல்வர் என்ற பொறுப்பு இல்லாமல் மோடி பேசியுள்ளார்.
ஆனால், நேற்று ஸ்டார் டிவிக்குப் பேட்டியளித்த லிங்டோ, எனக்கு மதமே கிடையாது. நான் ஒரு இந்தியன் என்று பதிலளித்தார்.
இந் நிலையில் மோடியின் பேச்சுக்கு கருணாநிதியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர், அரசியல் சட்டத்தின்கீழ் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரை இவ்வாறு அவரது மதத்தைக் குறிப்பிட்டு விமர்சிப்பது மிகத் தவறானது என்றார் கருணாநிதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications