எல்லையில் பெரும் பதற்றம்: ராணுவ தளபதி விரைந்தார்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பத்மநாபன்இன்று எல்லைப் பகுதிக்கு விரைந்தார்.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் கார்கில் அருகே உள்ள திராஸ் பகுதியில் பெரும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவும்பதிலடி தந்து வருகிறது.
இதையடுத்து இந்தப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. படைகளின் தயார் நிலை குறித்து அறியவும் எல்லைநிலவரத்தை நேரில் கண்டறியவும் ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபன் இன்று காலை எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளார்.
இந்தியப் படைகள் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் 60 இந்திய வீரர்கள் வரை இறந்துவிட்டதாக நேற்று பாகிஸ்தான் கூறியது.
ஆனால், இந்தியா மறுத்துவிட்டது. பொய் பேசுவதே பாகிஸ்தானுக்கு வழக்கமாகப் போய்விட்டது என இந்திய பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
முன்னதாக இன்று காலை ராணுவ கமாண்டர்களுடன் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவசரக் கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.
10 பேர் படுகொலை:
இதற்கிடையே காஷ்மீரில் ரஜெளரி மாவட்டத்தில் தோடாஸ்தான் என்ற கிராமத்தில் வீடு வீடாக நுழைந்த தீவிரவாதிகள் 3 பெண்கள் உள்பட8 அப்பாவிப் பொது மக்களை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அனைவரும் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடந்தது. காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கவும் தேர்தலை ஆதரிப்பவர்களை மிரட்டவுமே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே நேற்று டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று பாகிஸ்தான் சென்றார். இஸ்லாமாபாத்தில் அந் நாட்டு ராணுவஆட்சியளர் பர்வேஸ் முஷாரபை அவர் சந்தித்துப் பேசினார்.
தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் அனுப்பவில்லை என்று ஆர்மிடேஜிடம் இந்தியா நேற்று தெரிவித்தது. ஜம்மூ- காஷமீர்தேர்தலை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், முஷாரப் திருந்தவில்லை என்றும் அவரிடம் இந்தியா கூறி அனுப்பியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications