மதுரை பயங்கர திருவிழா: விசாரணை ஆரம்பம்
மதுரை:
குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து மதுரையில் நடந்த அதிபயங்கர திருவிழா குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனின்உத்தரவுப்படி விசாரணை ஆரம்பித்துள்ளது. மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கரத் திருவிழா குறித்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும் என்றுவேண்டியும் குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்கிறார்கள்.
இதன்படி இந்தக் கோவில் விழாவின்போது வயதுக்கு வராத சிறுமிகளை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து சில நிமிடங்கள் கழித்துஅவர்களை புதைகுழியில் இருந்து மீட்கின்றனர். இந்த விழா கடந்த புதன்கிழமை நடந்தது.
அதிபயங்கரமான இந்த நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விழாவில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவை 1996ம் ஆண்டிலேயே தேசிய மனித உரிமைக் கமிஷன் தடை செய்திருப்பதும் அதையும் மீறி இந்த விழாநடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்குமாறு மாநில அரசுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications