For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமயமலை சென்று கஞ்சா அடிக்கிறார் ரஜினி: ராமதாஸ்

By Super
Google Oneindia Tamil News

மரக்காணம்:

ரஜினி குறித்து சில நாட்கள் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீண்டும் அவரைக்கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பா.ம.கவினரைக் கொண்டு ஏரிகளைத் தூர்வாறும் பணியைச் செய்து வருகிறார் ராமதாஸ். மரக்காணம்பகுதியில் உள்ள ஏரிகளில் தூர்வாறும் பணியைத் துவக்கி வைத்த ராமதாஸ் அப் பகுதி மக்களிடையே பேசுகையில்,

சிகரெட், பாக்குக்கு தடை விதிச்சாங்க. ஆனா அதை வச்சித்தான் இங்கே ஒருத்தர் படமே எடுப்பாரு. பீடியை அப்படி போட்டுஇப்படி பிடிப்பாரு. இதைப் பாக்க நாம தியேட்டருக்குப்போய் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கனும்.

அவரு நடிச்ச படத்துக்கு கட்-அவுட் வச்சு அதுக்கு பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி எடுக்கிறான் தமிழன். ஆனால், அவருகர்நாடகத்துக்குப் போய் அங்கு மைசூர் சிறையில் தடாவில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றாகேட்டார்?. இல்லை.

Rajini Kanthராஜ்குமாரே என்னை வீரப்பன் நல்லா கவனிச்சுக்கிட்டான்னு சொல்ராறு. ஆனால், இவரு கர்நாடகாவுல போய் ராஜ்குமார் மகன்நடத்திய பட விழாவுல மைக்கை பிடிச்சுக்கிட்டு வீரப்பனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்னு பேசுறாரு.

ஏன் தமிழனை கொல்றதைப் பத்தி கர்நாடகவுல போய் பேசனும். வீரப்பனை கொல்ல வேண்டும் என்றால் நானும் தமிழன் தான்,என்னையும் கொல்ல வேண்டும் என்று அவர் பேசுவதாகக் தான் அர்த்தம்.

அதனால் தான் எங்கள் மக்களைக் கெடுக்காதே என்று அவருக்கு நான் கோரிக்கை வைத்தேன்.

இதுவரை தமிழ் சினிமாவை வைத்து ஆயிரம் கோடி வரைக்கும் சம்பாதித்துவிட்டார். கர்நாடகாவில் பல தொழிற்சாலைகள்நடத்தி வருகிறார். இன்னும் கட்டி வருகிறார். இதுனால தமிழனக்கு என்ன பயன்?

இவருக்கு இப்ப என்ன வேலை தெரியுமா? தினமும் சென்னை சோழா ஹோட்டலில் 2, 3 மணி நேரம் தண்ணி அடித்துவிட்டுதிரியிறது தான்.

இவர் முகத்தை நல்லா பாருங்கள். உதட்டையும் பாருங்க. எப்படி இருக்குது. இவர் இமயமலை போய் சாமியார் மாதிரிஇருந்துட்டு வர்றதா சொல்றாங்க. ஆனால், இவரு இமயமலை போய் கஞ்சா அடிச்சுட்டு வருகிறார்.

Ramdossஇவர் அரசியலுக்கு வரப் போறதா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இவரு அரசியலுக்கு வந்து என்ன செய்வாரு.

இவர் பட வெளியீட்டு விழாவுக்கு அமெரிக்காவில் இருந்து ஒருத்தரை கூட்டி வந்து சாகடிச்சிட்டாரு. செத்தவர் நம்ம தமிழர்என்பது தான் சோகம்.

இதனால சும்மா ரஜினி மன்றம் வக்கிறேன்னு சொல்லிகிட்டு திரியாம, பாரதியார், காந்தி, நேருன்னு நல்ல தலைவர்கள் பெயரில்ஏதாவது நற்பணி மன்றம் அமைத்து ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யுங்க என்றார் ராமதாஸ்.

பத்திரிக்கைக்கு பேட்டி:

இந் நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:

ரஜினிக்கு கட்-அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம், தீப ஆராதனை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்கள்.இவர்கள் வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையினர் அடிமட்டத்தில் வசிக்கும் தமிழர்கள்.

அப்பாவும் அம்மாவும் சித்தாள் வேலை செய்து வீட்டில் அடுப்பை எரித்து வருகிறார்கள். ஆனால், இந்த இளைஞர்கள் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், வீட்டைக் காப்பாற்றும் கவலையே இல்லாமல் இப்படி நடிகன் பின்னால் அலைகிறார்கள்.இவர்களுக்காக கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

இது நடிகனுக்கு மட்டுமல்ல, கட்சித் தொண்டனின் வியர்வையில் சொகுசாக வாழும் அரசியல்வாதிக்கும் இது பொருந்தும் என்றுராமதாஸ் கூறியுள்ளார்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X