தமிழகத்தில் விலைவாசி கிடுகிடு உயர்வு: அச்சத்தில் மக்கள்
சென்னை:
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் பலமுனை வரி காரணமாக தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய்ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வறட்சி நிலவுவதால் காய்கறி உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், கேரட் ஆகிய அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களில்கிலோ ஒன்றுக்கு ரூ. 5 வரை அதிகரித்துவிட்டது. இன்னும் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
சமையல் எண்ணெய்:
அதே போல தேங்காய் எண்ணெயின் விலை லிட்டர் ஒன்று ரூ. 50ல் இருந்து ரூ 60 ஆக உயர்ந்துவிட்டது.
சமையலுக்குப் பயன்படும் நல்லெண்ணெயின் விலை லிட்டர் ஒன்று ரூ. 47ல் இருந்து ரூ. 52 ஆக உயர்ந்துள்ளது. அக்மார்க் சமையல்எண்ணெயின் விலை மிக பயங்கரமாக உயர்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ. 47 ஆக இருந்த எண்ணெயின் விலை இன்றையநிலவரப்படி ரூ. 60 ஆகிவிட்டது.
மஞ்சளின் விலை ரூ. 10 அதிகரித்துவிட்டது. அதே போல புளியின் விலை ரூ. 30ல் இருந்து ரூ. 35 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரையின் விலைகிலோ ஒன்றுக்கு ரூ. 13.80ல் இருந்து ரூ.14.50 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு நின்றபாடாக இல்லை. தொடர்ந்து அதிகரித்து வருவது தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத ஊதியத்திலும் தினக் கூலியிலும் பட்ஜெட் போட்டு மிக ஜாக்கிரதையாக செலவுகள் செய்து வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையேஇந்த அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்குப் பருவக் காற்று மழையும் பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் வறட்சி நிலை ஓய்ந்தபாடில்லை. பிற மாநிலங்களில் இருந்தும்காய்கறிகள் வருவது குறைந்துவிட்டது.
இதனால் மக்களிடையே விலைவாசி குறித்த கவலை போய் பயம் கவ்வ ஆரம்பித்துவிட்டது.
இந் நிலையில் தமிழகத்தின் வறட்சி நிலவரம் குறித்து ஆராய மத்தியக் குழு அடுத்த மாதம் 23ம் தேதி தான் தமிழகம் வரும் என்று தெரிகிறது.மாநிலத்தின் 19 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும் மத்திய அரசின் உதவி தமிழகத்துக்குஉரிய முறையில் கிடைக்கவில்லை.
தமிழகம் மட்டுமின்றி வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய உதவி செய்யவில்லை என்றக் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
வறட்சி நிலையை சமாளிக்க தமிழகத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 720 கோடி தேவை என்று மாநில அரசு கோரியுள்ளது. குறைந்தபட்சம்தமிழகத்குக்கு 200 டன் அரிசியாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications